தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜெனிவாவில் முன்னாள் பிரதி அமைச்சர் கருணா மீது யுத்த குற்றச்சாட்டு..

ஜெனீவா மனித உரிமை பேரவையில் முதல் முறையாக, முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனுக்கு எதிராக யுத்தக் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 1990 ஆம் ஆண்டு 600 பொலிஸார் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் கருணாவை  மேற்கோள்காட்டி சிங்கள பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

1990 ஆம் ஆண்டு ஜுன் மாதம் 11 ஆம் திகதி   திருக்கோவில் பகுதியில் 600 பொலிஸார் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தான் கருணாவிற்கு எதிராக, ஜெனீவா மனித உரிமை பேரவையில் சாட்சி வழங்க தயார் என, புலம்பெயர்ந்தவரான கலாநிதி போல் நிவுமன் தெரிவித்துள்ளதாக அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Comments
Loading...