தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ஜெனீவாவில் கொட்டும் மழையிலும் அலையென திரண்டுள்ள ஈழத்தமிழர்கள்..

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை பேரவையின் 40வது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடைபெற்று வருகிறது. இதன்போது முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கான நீதியை வலியுறுத்தி பாரிய கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கொட்டும் மழையிலும் பெருந்தொகையான ஈழத்தமிழர்கள் போராட்டத்தினை முன்னெடுத்து வருகின்றனர்.

போரக்குற்றத்திற்கு நிலையான நீதி வேண்டும் என்றும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. ஜெனிவாவில் கடும் குளிரான காலநிலையை பொருட்படுத்தாது பெருந்தொகை ஈழ மக்கள் ஒன்று கூடியுள்ளனர். வழமைக்கு மாறாக அடைமழை பெய்து வரும் நிலையில் பாரிய பேரணி தற்சமயம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

Comments
Loading...