தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

டிக் டாக் செயலியை தடை செய்ய விரைவில் நடவடிக்கை…

டிக் டாக் செயலியை தடை செய்ய விரைவில் நடவடிக்கை  எடுக்க  உள்ளதாக  தமிழக சட்டப் பேரவையில் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார்.

இளைஞர்களிடையே பரவி வந்த டிக் டாக் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பயன்படுத்துவோரை அடிமையாகியது.

தங்களுக்கு  பிடித்த பாடல்களுக்கு நடனம் ஆடியும் பிடித்த வசனங்களை டப் செய்தும் சமூக வலைதளங்களில் பதிவிட இந்த ஆப்  பயன்படுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில்  சமீபகாலமாக  இந்த டிக்டாக்  ஆபாசங்களுக்கு வழிவகுப்பதாக கூறிய  மனிதநேய ஜனநாயகக் கட்சி உறுப்பினர் தமீமுன் அன்சாரி, குறித்த  ஆப்பை தமிழகத்தில்  தடை செய்ய வேண்டும் என கோரியிருந்தார்.

இதனையடுத்து   ப்ளூவேல் சர்வரை தடைசெய்ததை போல டிக்டாக் செயலியையும் தடை செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்  என தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன்  கூறியுள்ளார்.

Comments
Loading...