தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

டி20யில் ஜொலித்து ஒருநாள் போட்டிக்கு விரைவில் திரும்புவேன்- ரெய்னா

இந்திய ஒருநாள் மற்றும் டி20 அணியின் அதிரடி பேட்ஸ்மேனாக திகழந்தவர் சுரேஷ் ரெய்னா. ஆனால் நீண்ட நாட்களாக அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை. கடும் பயிற்சியால் நீண்ட இடைவெளிக்குப் பிறகு தென்ஆப்பிரிக்கா தொடரில் வாய்ப்பு கி்டைத்தது.

நேற்று நடைபெற்ற கடைசி டி20 போட்டியில் 27 பந்தில் 43 ரன்கள் அடித்தார். அத்துடன் 3 ஓவரில் 27 ரன்கள் விட்டுக்கொடுத்து 1 விக்கெட் வீழ்த்தினார். இதனால் ஆட்ட நாயகன் விருதை பெற்றார். டி20 போட்டி மூலம் மறுபிரவேசம் ஆகியுள்ள ரெய்னா, விரைவில் ஒருநாள் போட்டிக்கான இந்திய அணியில் இடம்பிடிப்பேன் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சுரேஷ் ரெய்னா கூறுகையில் ‘‘அணிக்கு மீண்டும் திரும்பியது எனக்கு மிகவும் முக்கியமானது. தென்ஆப்பிரிக்கா தொடருக்குப்பின் முத்தரப்பு டி20 தொடர் மற்றும் ஐபில் தொடர் உள்ளது. ஏராளமான போட்டிகளில் நாங்கள் விளையாட உள்ளோம்.

நான் உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம்பிடித்திருந்தேன். 2011-ம் ஆண்டு கோப்பையை கைப்பற்றினோம். அது என்னுடைய முதல் உலகக்கோப்பை. அதில் கோப்பையை கைப்பற்றினோம். அது ஒரு நம்ப முடியாத உணர்வு.

ஒருநாள் போட்டிக்கு திரும்பிய பிறகு ஐந்தாவது இடத்தில் நான் சிறப்பாக செயல்படுவேன். இன்னும் சில போட்டிகளில் சிறப்பாக விளையாடிய பின்னர், உறுதியாக விரைவில் ஒருநாள் போட்டிக்கான அணிக்கு என்னால் திரும்ப முடியும்’’ என்றார்.

ரெய்னா கடைசியாக இந்திய அணிக்காக 2015 அக்டோபர் மாதம் களம் இறங்கினார். அதன்பின் அவருக்கு இந்திய அணியில் இடம் கிடைக்கவில்லை.

Comments
Loading...