தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

 ட்ரம்பின் அழைப்பை ஏற்று அமெரிக்கா செல்லவுள்ளார் கிம்..

அமெரிக்கா   அதிபர் ட்ரம்பின் அழைப்பை ஏற்று  வடகொரிய அதிபர் கிம்  அமெரிக்காவிற்கு பயணம்  செல்லவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னும் நேற்று முன்தினம் சிங்கப்பூரில் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.

வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த சந்திப்பின்போது, அணு ஆயுதங்களை ஒழிக்க வடகொரியா ஒப்புக் கொண்டுள்ளது.

இந்த சந்திப்பின்போது , வடகொரியாவுக்கு வருமாறு ட்ரம்புக்கு கிம் அழைப்பு விடுத்ததாகவும் அதுபோல அமெரிக்காவுக்கு வருமாறு கிம்முக்கு ட்ரம்ப் அழைப்பு விடுத்ததாகவும் வடகொரிய செய்தி நிறுவனமான கேசிஎன்ஏ தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் வடகொரியா, அமெரிக்கா இடையிலான உறவு மேம்பட இந்த பயணம் உதவும் என்பதால், இரு தலைவர்களும் பரஸ்பரம் அழைப்பை ஏற்றுக் கொண்டுள்ளதாக  கேசிஎன்ஏ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments
Loading...