Designed by Iniyas LTD
ட்ரோன்கள் தென்பட்டதால் அமெரிக்காவில் விமானங்களின் சேவை நிறுத்தம்..
சந்தேகத்துக்கு இடமான வகையில் ட்ரோன்கள் தென்பட்டதால், அமெரிக்காவின் நேவார்க் விமான நிலையத்தில் விமானங்களின் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.
நியூஜெர்சியின் நேவார்க் விமான நிலையத்தில் இருந்து 17 மைல் தொலைவில் உள்ள சிறிய ரக விமானங்களைக் கையாளும் டெர்போரோ விமான நிலையம் உள்ளது.
அங்கு சுமார் 3 ஆயிரத்து 500 அடி உயரத்தில் 2 ட்ரோன்கள் தென்பட்டன.
இதையடுத்து இரு விமான நிலையங்களிலும் விமானங்களின் புறப்பாடு, வருகை சேவை நிறுத்தப்பட்டு, விசாரணைக்குப் பின் விமானங்களின் சேவை மீண்டும் தொடங்கியதாக தெரிவிக்கபட்டுள்ளது.
இதேவேளை ஏற்கெனவே கிறிஸ்துமஸ் சமயத்தில் லண்டனின் கேட்விக் விமான நிலையம் அருகே ட்ரோன்கள் தென்பட்டதாக கூறி இதே விமான சேவை 3 நாட்களுக்கு நிறுத்தப்பட்டு, ஒரு லட்சத்து 40 ஆயிரம் பயணிகள் பாதிக்கப்பட்டமை நினைவில்கொள்ளத்தக்கது.