தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

ட்விட்டரில் ரெண்ட் ஆன “#நான்தான்பாரஜினிகாந்த்”

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டக்காரர்கள்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டின்போது ஏற்பட்ட கலவரத்தில் படுகாயமடைந்தவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறுவதற்காக நடிகர் ரஜினிகாந்த் இன்று, தூத்துக்குடி சென்றார்.

அப்போது, துப்பாக்கிச் சூட்டில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவரும் நபர் ஒருவர், “நீங்கள் யார்? இப்போது எதற்காக இங்கு வந்தீர்கள்?” என ரஜினியைப் பார்த்துக் கேட்டார். இதையடுத்து இறுக்கமான முகத்துடன் நடிகர் ரஜினி, அந்த இடத்தை விட்டு நகர்ந்து சென்ற வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

#நான்தான்பாரஜினிகாந்த்

சென்னையிலிருந்து இங்கே வர 100 நாட்கள் ஆச்சா என அந்த இளைஞர் கேள்வி எழுப்ப ரஜினிகாந்த் சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றார். 100 நாட்களுக்கும் மேலாக ஸ்டெர்லைட் போராட்டம் நடந்து வரும் நிலையில், ரஜினிகாந்த் தற்போது அங்கு சென்றுள்ளதை மையமாக வைத்து பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதனால், நான்தான்பாரஜினிகாந்த் என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் டிரெண்டிங் ஆகி வருகிறது.

 

Comments
Loading...