தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தனக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை வறுமையில் உள்ள குடும்பம் ஒன்றிற்கு வழங்கிய பிரதேசசபை உறுப்பினர்

தனக்கு வழங்கப்படும்  சம்­ப­ளத்தை வறு­மை­யில் உள்ள குடும்பத்துக்கு புதுக்­கு­டி­யி­ருப்பு பிர­தேச சபை உறுப்­பி­னர் ஒருவர் வழங்கி­யுள்­ளார்.

ஒட்­டு­சுட்­டா­னைச் சேர்ந்த இலங்­கைத் தமிழ் அர­சுக் கட்­சி­யின் பிரதேசபை உறுப்­பி­னரான சந்திரரூபன்   இவ்வாறு  தனது முதல் மாதச் சம்­ப­ள­மான 15 ஆயி­ரம் ரூபாவை வறு­மை­யில் உள்ள குடும்பம் ஒன்றிற்கு வழங்­கி­யுள்­ளார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை ஒட்­டு­சுட்­டா­னில் வைத்து அதே இடத்­தைச் சேர்ந்த குடும்­பம் ஒன்றிற்கு  அவர் இதனை வழங்­கி­யுள்­ளார்.

இதே­வேளை, சுயேச்­சைக் குழு உறுப்­பி­ன­ரான சி.சுரேஷ் தனது சம்பளத்­தை­யும் இவ்­வாறு வழங்­கப் போவ­தாக சபை அமர்­வில் தெரிவித்­தி­ருந்­தமை குறிப்­பி­டத்­தக்­கது.

 

Comments
Loading...