தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தப்பிய தமிழகம் ரெட் அலர்ட் எச்சரிக்கை வாபஸ்…

அக்டோபர் 7ஆம் தேதி தமிழகத்தில் வானிலை மிகவும்மோசமாக இருக்கும் என  இந்திய வானிலை ஆய்வு மையம் “ரெட் அலெர்ட்”  எச்சரிக்கை விடுத்திருந்தது.

அதனால் மக்கள் பாதுகாப்பான இடங்களில் தஞ்சமடையவேண்டும் பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்புதுண்டிக்கப்படும்.தமிழகத்தில் 25 சென்டிமீட்டருக்கு மேல் மழை பெய்யும் .கடல் அதிக சீற்றத்துடன் காணப்படும், மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்என்றும் எச்சரிக்கை விடுத்தது

இந்த  முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக கன்னியாகுமரி ,நீலகிரி,மதுரை,கோவை மாவட்டங்களுக்கு தேசிய பேரிடர் மீட்ப்புப்படையினர் சென்றதாகவும் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில் தற்போது தமிழகத்தில் நாளை அதிகனமழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...