தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கேப்பாபுலவு மக்கள் மனுஒன்றை அனுப்பிவைத்துள்ளனர்.

கேப்பாபுலவு மக்கள் இன்று நாடாளுமன்ற உறுப்பினர்கள், மாகாண முதலமைச்சர் மற்றும் அவைத்தலைவர் ஆகியோருக்கு மனு ஒன்று கையளித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமது காணிகளை விடுவிக்குமாறு கோரி கடந்த வருடம் மார்ச் மாதம் முதலாம் திகதி குறித்த மக்கள் போராட்டத்தை  ஆரம்பித்த நிலையில், குறித்த  போராட்டம் இன்று ஒரு வருடத்தை கடந்து 414ஆவது நாளாக இன்றும் தொடர்கின்றது.

இந்நிலையில்  அவர்கள் தமது  பூர்விக வாழ்விடதிற்கான தீர்வை வழங்க  கோரி நாடாளுமன்ற உறுப்பினர்கள், முதலமைச்சர் அவைத்தலைவர் மற்றும் மாகாண உறுப்பினர்களுக்கு மனுவொன்றை கையளித்துள்ளனர்.

>அந்தவகையில் நாடாளுமன்ற உறுப்பினரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா.சம்மந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராசா மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராஜா ஆகியோருக்கான மனு சாந்தி சிறிஸ்கந்தராஜாவிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும்,  ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மனுக்கள் அனுப்பிவைக்கப்படவுள்ளதாகவும்   கேப்பாப்பிலவு மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை  வடமாகாண முதலமைச்சர் சி வி விக்னேஸ்வரன் மற்றும் வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே சிவஞானம் ஆகியோருக்கான மனுக்கள் வடமாகாண சபை உறுப்பினர் ஆண்டியையா புவனேஸ்வரனிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...