தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகத்தில் இருந்து தாயகம் செல்லவுள்ள 39 குடும்பங்கள்…

நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்து தமிழகத்தில் தஞ்சமடைந்தவர்களில்   39 குடும்பங்கள்  எதிர்வரும் 31ஆம் திகதி தாயகம் திரும்பவுள்ளனர்.

இவர்கள் அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் தூதரகத்தின் உதவியுடன், நாடு திரும்பவுள்ளதாகவும் குறிப்பிடபப்ட்டுள்ளது ,

இத்தகவலை  மீள்குடியேற்றம், புனர்வாழ்வு வடமாகாண அபிவிருத்தி, தொழிற்பயிற்சி, திறன்கள் அபிவிருத்தி மற்றும் இளைஞர் விவகார அமைச்சின் செயலாளர் வே.சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

நாடுதிரும்பவுள்ளவர்கள்  யாழ்ப்பாணம், மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்படுகின்றது.

அவர்களிற்கான  இலவச பயணச்சீட்டு, ஒன்றிணைத்தல் மானிய கொடுப்பனவாக வயது வந்தவர்களுக்கு 10,000 ரூபாவும், வயது குறைந்தவர்களுக்கு 5,000 ரூபாவும், போக்குவரத்துக் கொடுப்பனவாக 2,500 ரூபாவும்,

உணவு அல்லாத மானிய கொடுப்பனவாக தனிநபருக்கு 5,000 ரூபாவும், குடும்பத்திற்கு 10,000 ரூபாவும், அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் தூதரகத்தால் வழங்கப்படுகின்றது.

மேலும் மீள்குடியேற்ற அமைச்சினால் விமான நிலையத்தில் 5,000 ரூபாவும் தற்காலிகக் கொட்டகைகளுக்காக 25,000 ரூபாவும், உபகரணங்களுக்கு 3,000 ரூபாவும் காணி துப்புரவு செய்வதற்கு 5,000 ரூபாவும் கொடுப்பனவு செய்யப்படுவதுடன்

வாழ்வாதாரத் திட்டங்களிலும் வீட்டுத் திட்டங்களின்  தெரிவின்போது அவர்களிற்கு  சிறப்புப் புள்ளிகள் வழங்கப்படுகின்றதாகவும்  அவர்  மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...