தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகத்தில் இருந்து நாடு திரும்பியுள்ள ஈழத்தமிழர்கள்…

தமிழக அகதி முகாம்களில் வசித்து வந்த 42 ஈழத்தமிழர்கள் நாடு திரும்பியுள்ளனர்.

மூன்று விமானங்களில்  நேற்று முன் தினம் அவர்கள் நாட்டிற்கு சென்றுள்ளனர்.

19 குடும்பங்களைச் சேர்ந்தவர்களே 49 பேர் இவ்வாறு  நாடு திரும்பியதாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் வே. சிவஞானசோதி தெரிவித்துள்ளார்.

நாடுதிரும்பியவர்கள்  யாழ்ப்பாணம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் திருகோணமலை ஆகிய  பிரதேசங்களை சேர்ந்தவர்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் ஐக்கிய நாடுகளின் அகதிகளுக்கான முகவர் நிலையத்தினால் அவர்கள் நாட்டிற்கு அழைத்து செல்லபப்ட்டுள்ளனர்.

இதேவேளை அவர்களிற்கு  50 கிலோகிராம் பொருட்களை மேலதிகமாக நாட்டிற்குக் கொண்டுசெல்ல  சிறப்பு சலுகை வழங்கப்பட்டிருந்ததாக மீள்குடியேற்ற அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...