தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழகத்தில் வீட்டை சீரமைக்க மகனை அடகு வைத்த கூலி தொழிலாளி…

  வறுமையின் பிடியில் சிக்கித் தவித்த கூலித் தொழிலாளி தனது மகனை அடமானம் வைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்நாடு தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே  இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

கஜா புயலால் குடிசை வீட்டையும், வருமானத்தையும் இழந்ததால் குடிசையை சீரமைப்பதற்காக தனது 12 வயது மகனை ரூ.10 ஆயிரத்துக்கு அடமானம்  வைத்ததாகவும் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

குறித்த  கூலித் தொழிலாளி ஒருவர் தன் மனைவி, 2 மகன்கள், ஒரு மகளுடன் ஒருவரின் தென்னந்தோப்பில் குடிசை அமைத்து தங்கிக்கொண்டு, அந்தத்தோப்பைக் கவனித்துக் கொள்ளும் வேலையை செய்துவந்தார்.

 

இந்நிலையில், கஜா புயலால் இவரது குடிசை வீடு மற்றும் உடமைகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில்,

எப்படியாவது குடிசை வீட்டை சீரமைத்துவிட வேண்டும் என்று எண்ணி  அருகில் இருந்த ஒருவரின் உதவியுடன் 12 வயதேயான தன் இளைய மகனைரூ.10 ஆயிரத்துக்கு அடமானமாகவைத்து வீட்டை சீரமைத்துள்ளதாக கூறப்படுகின்றது.

பணம் கொடுத்தவர்  சிறுவனை ஆடுமேய்க்க வைத்திருந்த நிலையில்,

தகவலறிந்து சென்ற நாகை கோட்டாட்சியர்   தலைமையிலான வருவாய்த் துறை மற்றும் சமூக நலத்துறை அலுவலர்கள்  சிறுவனை மீட்டுள்ளதாக தெரிவிகப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...