தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழக மீனவர்களிற்கு சிறைத்தண்டனை விதித்த ஊர்காவற்துறை நீதிமன்றம்..

யாழ்.நெடுந்தீவு  கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட ஒன்பது மீனவர்களுக்கும் , ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டாண்டு கடூழிய சிறைத்தண்டனை விதித்துள்ளது.

கடந்த 13ஆம் திகதி யாழ்.நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி  மீன்பிடியில் ஈடுபட்ட குற்ற சாட்டில் ஒன்பது தமிழக மீனவர்களை கடற்படையினர்   கைது செய்திருந்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை அன்றைய தினம் மாலை கடற்படையினர் யாழ்.மாவட்ட நீரியல் வளத்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில் அவர்களை ,

ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் அ.ஜூட்சன் முற்படுத்தினார்கள்.

இதனை அடுத்து மீனவர்கள் ஒன்பது பேரையும் விளக்கமறியலில் தடுத்து வைக்க நீதிவான் உத்தரவிட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்றதில் விசாரணைக்கு   எடுத்துக்கொள்ளப்பட்ட போது , ஒன்பது மீனவர்களையும் கடுமையாக எச்சரித்த நீதிவான் , ஐந்தாண்டுகளுக்கு ஒத்திவைக்கப்பட்ட இரண்டாண்டு சிறைத்தண்டனை விதித்துள்ளார்.

இதேவேளை , மீனவர்களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட படகுகளின் உரிமையார்கள் படகுகளின் ஆவணங்களுடன் எதிர்வரும் மார்ச் மாதம் ௦7ஆம் திகதி மன்றில் முன்னிலையாக வேண்டும் எனவும்  நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இதேவேளை  படகுகளின் உரிமையார்கள் மன்றில் முன்னிலையாக  தவறும் பட்சத்தில் படகுகள் அரசுடமையாக்கப்படும் எனவும்  நீதிவான் இதன்போது அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...