தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழக முகாமில் இருந்து நாட்டிற்கு சென்ற 49 பேர்.

நாட்டில் இடம்பெற்ற யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து தமிழக முகாம்களில் வசித்து வந்த 49 இலங்கை தமிழ் அகதிகள் நேற்று நாடு திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு திரும்பியவர்கள் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எனவும்  தெரிய வருகின்றது.

அவர்களுக்கான அடிப்படை உதவிகளை அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையம்(UNHCR) செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...