தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழர்களிற்கு அச்சுறுத்தல் விடுத்த இராணுவ பிரிகேடியருக்கு பிரித்தானிய நீதிமன்றம் அழைப்பாணை…

இலங்கை  இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டே கடந்த வருடம் பிரித்தானியாவில் வாழும் தமிழர்களிற்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தார்.

கடந்த வருடம் நடைபெற்ற சிறிலங்காவின் 70வது சுதந்திரதினத்தன்று சிறிலங்கா உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் முன் நடந்த போராட்டமொன்று இடம்பெற்றிருந்தது.

இதன்போது  இராணுவ பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டே போராட்டக்காரர்கள் மீது கொலை அச்சுறுத்தல் விடுக்கும் விதமாக கழுத்தை அறுப்பது போன்று சைகை காட்டியிருந்தார்.

இந்நிலையில் அதற்காக வரும் 21ம் திகதி வெஸ்மின்ஸடர் நீதிமன்றத்தில்  அவரை ஆயராகுமாறு அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...