தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழர்களுக்கு நீதி வழங்க ஐ.நா. தவறிவிட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார் அனந்தி சசிதரன் ..

தமிழர் விடயத்தில் ஐக்கிய நாடுகள் சபை காத்திரமான நடவடிக்கைகளை மேற்கொள்ள தவறியுள்ளதாக,  முன்னாள்  வட மாகாணசபை  உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்துள்ளார்.

யாழ். ஊடக அமையத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டபோதே  அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் நிறைவடைந்து 10 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், தமிழர் விடயத்தில் ஐ.நா காத்திரமான நடவடிக்கைகள் எதனையும் எடுக்கவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், ஐ.நா மனித உரிமை பேரவையில் நீதியைப் பெற்றுக் கொள்ள, தமிழ்த் தரப்புக்கள் ஒருமித்து முழுமையான பங்களிப்பை செய்ய வேண்டும் அவர் இதன்போது வேண்டுகோள் விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...