தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழர் தாயகத்தில் இராணுவத்தை நிலைநிறுத்த முழு அளவில் முயற்சிகள்

தமிழர்  தாயகத்தில்   இலங்கை இராணுவத்தை நிலைநிறுத்த முழு அளவில் முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழினப் படுகொலையின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக கருதப்படும் முள்ளிவாய்க்கால் கொடூரத்தின் பின்னர் வன்னியில் ஒரு இலட்சம் வரையிலான  இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர்.

இந்நிலையில் தாயகத்தில் அண்மையில் இடம்பெற்ற வெள்ள அனர்த்ததின் போது இலங்கை இராணுவம் மற்றும் கடற்படை மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டது.

உலகளாவிய ரீதியில் இவ்வாறு படைகள் வெள்ள அனர்த்தத்தின் போது மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுவது வழமையாகும்.

எனினும் இதனை  முன்னிறுத்தி இராணுவம் தொடர்ந்தும் வன்னியில் தங்கியிருக்க வேண்டுமென கோரி அநாமதேய துண்டுபிரசுரங்கள்,பேனர்கள் வன்னியில் ஒட்டப்பட்டுள்ளன.

இதன் பின்னணியில் இராணுவபுலனாய்வு கட்டமைப்புள்ளதாக சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

இதேவேளை  அரச படையினர் பலவந்தமாக கையகப்படுத்தி வைத்துள்ள பொது மக்களின் காணிகளை விடுவிப்பதுடன் தமிழ் தாயகத்தில் தொடரும் இராணுவ மயமாக்கலை  முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என  தமிழ் மக்கள் வலியுறுத்திவருகின்றனர்.

யுத்தத்தின் போது இடம்பெற்ற மிகவும் மோசமான படுகொலைகள், சித்திரவதைகள் உட்பட சர்வதேச சட்டங்களை அப்பட்டமாக மீறிய சம்பவங்கள் மற்றும் மோசமான மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நீதி நிலைநாட்டப்பட வேண்டுமாயின் படைகளது வெளியேற்றம் முக்கியமான ஒன்றாகும்.

இவ்வாறான நிலையில் தமிழர் தாயகத்தில்  படையினரது நிலைகொள்ளலை வலுப்படுத்துவதில் வடமாகாண ஆளுநர் கூரே முன்னின்று செயற்பட்டுவருகின்றார்.

இவ்வாறான  யாழ்.மாநகரசபையின் மக்கள் பிரதிநிதிகள் இராணுவ பங்குபற்றலுடனான வேலை திட்டங்களை நிராகரித்துள்ளதுடன் இதனை தீர்மானமாகவும் அமுல்படுத்தியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

எனினும்   கூட்டமைப்பு சார்பு முதல்வர் மற்றும் துணைமுதல்வர் ஆகியோர் படையினருடான நிகழ்வுகளில் தொடர்ந்தும் முன்வரிசையில் பங்கெடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...