தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழினத்துக்கு துரோகம் செய்தவரா முஸ்லிம்களை காப்பாற்ற போகிறார்? கருணா மீது முபீன் பாய்ச்சல்

தமிழ், முஸ்லிம் மக்களை நம்ப வைத்து அவர்களுக்குத் துரோகம் இழைத்தவர் கருணா. அவ்வாறனவர் தமிழர்களை முஸ்லிம்களிடம் இருந்து மீட்பதற்கான போராட்டத்தில் இணைந்து கொள்ள வேண்டும் என்று அறைகூவல் விடுக்கிறார். இது அவரது இனத்துவேசத்தையும், சுயநல அரசியல் நோக்கத்தையும் எடுத்துக் காட்டுக்கிறது.

இவ்வாறு சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினருமான யு.எல்.எம்.என். முபீன் தெரிவித்தார்.

ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவா் இவ்வாறு கூறினார்.

தனது சுயநல அரசியலுக்காக தமிழ் முஸ்லிம் மக்களின் உறவைச் சீர்குலைத்து அதில் குளிர்காய்வதற்கு கருணா முயற்சிப்பது அருவருக்கத்தக்கது.

கிழக்கு மாகாணத்தில் இனத்துவேச இனவாத நடவடிக்கைகளைத் திட்டமிட்டுச் செயற்படுத்தி வந்தவர். இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்திலிருந்து செயற்பட்டபோதும், மீள் குடியேற்றத்துக்கான முன்னாள் பிரதியமைச்சராக இருந்த போதும் இந்த மனநிலையுடனே செயற்பட்டு வந்தார். அதற்கு அவரது அறிக்கை போதுமானது. கிழக்கில் முஸ்லிம்களின் படுகொலை, வடக்கில் முஸ்லிம்களின் வெளியேற்றம் என தமிழ் முஸ்லிம் உறவைச் சீர்குலைத்து அழிவு நாசங்களைப் புரிந்தவர் கருணா.

தற்போது மீண்டும் களத்துக்கு வந்து தமிழ் மக்கள் ஒற்றுமைப்பட வேண்டும் என்று நீலிக் கண்ணீர் வடிக்கிறார். இதனை அறிவாளிகளான தமிழ் சமூகம் நன்கு புரிந்து கொள்ளும். – என்றார்.

Comments
Loading...