தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் தீபமேந்திய ஊர்தி பவனி நல்லூரில் இருந்து புறப்பட்டுள்ளது

யாழ் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இருந்து முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை வாரத்தில் தமிழினப் படுகொலையில் உயிர் நீத்தவர்களை நினைவு கூரும் வகையில் தீபமேந்திய ஊர்தி பவனி இன்றுகாலை புறப்பட்டுள்ளது.

வல்வெட்டித்துறை

வல்வெட்டித்துறையில்  இருந்து நேற்றையதினம்  காலை  10.30 மணிக்கு   ஆரம்பித்த  பவனி ஊர்தி இன்று காலை 9 மணியளவில் நல்லூரை சென்றடைந்துள்ளது.

முள்ளிவாய்க்கால்

இளைஞர்களால் ஏற்பாடு செய்யப்பட்டு நடத்தப்படும் தீப ஊர்திப் பவனி வடமாகாணத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்பட்டு மே 18 ஆம் திகதி முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முற்றத்தைச் சென்றடைய உள்ளது.

இந்நிலையில் தமிழினப் படுகொலையில் உயிர்நீத்த மக்களுக்கு இந்த  ஊர்தியில்  அஞ்சலி செலுத்துமாறு தாயக மக்களிடம் ஏற்பாட்டாளர்கள் கேட்டுள்ளகொண்டுள்ளனர்.

Comments
Loading...