தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தலைவலியிருந்து உடனடி நிவாரணம் தரும் சில உணவுகள்…

நம்மில் பலரிற்கு அடிக்கடி தலைவலி ஏற்படும். அவ்வாறு தலைவலி வந்தால், அதனை தாங்கிக் கொள்வது என்பது மிகவும் கடினமான ஒன்று.

தலைவலி ஏற்படுவதற்கு காரணம், உடல் வறட்சி, தூக்கமின்மை, அதிகமான வேலைப்பளு, மன அழுத்தம், ஆல்கஹால் அருந்துவது போன்றவை காரணமாக அமைகின்றன.

தலைவலியை போக்க கூடிய உணவுகள்..

உருளைக்கிழங்கு
உருளைக்கிழங்கு சாப்பிட்டால், தலை வலியை சரிசெய்யலாம்.  ஆல்கஹால் அருந்துவதால் ஏற்படும் தலைவலியை குணமாக்கும்.

தர்பூசணி

உடலில் வறட்சியினால் தலை வலி வரும். எனவே தலை வலியின் போது மாத்திரைகளை சாப்பிடுவதை விட, நீர்சசத்து அதிகம் உள்ள உணவுப் பொருட்களான தர்பூசணியை சாப்பிடலாம்.

காபி

ஆம்,தலை வலியின் போது காபி குடித்தால், தலை வலி போய்விடும். ஏனெனில் தலைவலிக்கும் போது உட்கொள்ளும் மாத்திரைகளில் காப்ஃபைன் இருப்பதால் தான் தலைவலி குணமாகிறது.

கோதுமை பிரட்

கார்போஹைட்ரேட் உடலில் குறைவாக இருந்தாலும்,தலை வலி உண்டாகும். அதற்கு போதுமை பிரட், பழங்கள் போன்றவற்றை சாப்பிட வேண்டும். இதனால் உடலில் உள்ள செரோட்டின் உற்பத்தி அதிகமாகி, மனநிலையும் சீராகும்.

பாதாம்


நிறைய ஆய்வுகளில் பாதாமில் இருக்கும் மக்னீசியமானது தலைவலிக்கு சிறந்த தீர்வைத் தரும் என்று சொல்கிறது. எனவே ஒற்றைத் தலை வலியால் பாதிக்கப்பட்டவர்கள், பாதாம் சாப்பிட்டால் தலைவலிபோகும்.

காரமான உணவுகள்

தலைவலியின் போது கார உணவுகளை சாப்பிட்டால்,தலை வலியானது சீக்கிரம் பறந்து போய்விடும்.

தயிர்

தலை வலியின் போது கால்சியம் உள்ள உணவுகளை சாப்பிட வேண்டும். இதனால் தலை வலி குணமாவதோடு, உடலில் ஏற்படும் கால்சியம் குறைபாட்டை தடுக்கலாம்.

எள்
எள்ளில் வைட்டமின் ஈ அதிகம் உள்ளது. ஆகவே இதனை சாப்பிட்டால், உடலில் உள்ள ஈஸ்ட்ரோஜன் அளவு அதிகரிப்பதோடு, கடுமையான தலை வலியும் போய்விடும்.

பசலைக் கீரை

பசலைக் கீரை உடலில் உள்ள இரத்த அழுத்தத்தை குறைப்பதோடு, தலைவலியையும் குறைக்கும்.

Comments
Loading...