தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தலை சுற்றல் ஏன் ஏற்படுகின்றது?

தலைச்சுற்றலுக்கு முக்கிய காரணம் என்றால் அது காதுகள் தான்.
ஆனால்  ஒற்றைத் தலைவலி, உயர் ரத்த அழுத்தம்,  குறை ரத்த அழுத்தம், மிகை ரத்தக்கொதிப்பு, ரத்தசோகை, ஊட்டச்சத்து குறைவு, நீரிழிவு, தாழ் சர்க்கரை, கழுத்து எலும்பில் பிரச்சனை,  தைராய்டு பிரச்சனை, கர்ப்பத்தின் ஆரம்பம், இதயத் துடிப்பு கோளாறுகள், மருந்துகள் பக்கவிளைவு, பார்வை கோளாறு, மன அழுத்தம்,  உறக்கமின்மை, தலைக்காயங்கள் என பலவற்றைக் மருத்துவர்கள். கூறுகின்றனர்
தலைச்சுற்றலுக்கு மாத்திரை மருந்துகள் மட்டும் தீர்வாகாது.
குறிப்பிட்ட உடற்பயிற்சிகளைச் செய்வதும் முக்கியம். கண்களை மூடி கண்களைச்  சுற்றுதல். கழுத்துக்கு பயிற்சி அளித்தல், நடந்துகொண்டே பந்தைப் பிடித்தல் போன்ற பயிற்சிகள் தலைச் சுற்றலைத் தடுக்க உதவும்.

இதை தடுக்க,

* மன அழுத்தத்தைத் தவிர்க்க வேண்டும். உணவில் உப்பை குறைத்துக்கொள்ள வேண்டும்,
* அதிக கொழுப்புள்ள உணவைத் தவிர்க்க வேண்டும். சரியான அளவு ஓய்வும் உறக்கமும் அவசியம்.
* புகைப்பிடித்தல், மது அருந்துதல் ஆகியவற்றைத் தவிர்க்க வேண்டும். போதை மருந்துகளை தவிர்க்க வேண்டும்.
* ஆண்டுக்கு ஒருமுறையாவது காது பரிசோதனை செய்வது அவசியம்.
Comments
Loading...