தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தல59 மாஸ் அப்டேட்..! இயக்குனர் இவர் தான்

இயக்குநர் சிறுத்தை சிவா இயக்கத்தில் தல அஜித் நடித்துவரும் படம் தான் “விஸ்வாசம்”. பல சர்சைகளுக்கு பிறகு இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதனை அடுத்து  அஜித்தை வைத்து , பில்லா, ஆரம்பம் போன்ற சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குனர் விஷ்ணுவர்தன்.

இந்த நிலையில் , அஜித் தன்னுடைய 59-வது படத்தை இயக்கும் வாய்ப்பை இயக்குனர் விஷ்ணுவர்தனுக்கு கொடுக்கவுள்ளார்.

சமீபத்தில் இதற்க்கான, பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், விஸ்வாசம் படப்பிடிப்பு முடிந்ததும் படத்தின் ரிலீசிற்கு முன்னரே தல59 படப்பிடிப்பை தொடங்கும் முடிவில் அஜித் இருக்கிறார் என்றும், இது குறித்த அதிகாரபூர்வ தகவல்கள் கூடிய விரைவில் அறிவிக்கப்படும் என தகவல் வெளிவந்துள்ளது.

இதேவேளை , தீரன் அதிகாரம் ஒன்று படத்தை இயக்கிய இயக்குனர் வினோத்குமாருடன் தல  இணையவுள்ளதாக  தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் இப்பொது விஷ்ணுவர்த்தன் இந்த வாய்ப்பை பெற்றுள்ளது ரசிகர்களை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

எனினும் இயக்குனர் விஷ்ணுவர்த்தன், கூட்டணியில் நடிகர் அஜித் இணைவது மாஸாக இருக்கும் என பல ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Comments
Loading...