தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தழிழீழ மாவீரர் லெப்டினன்ட் போசனின் கல்வெட்டு தஞ்சாவூரில்…

 

தமிழ்நாடு  தஞ்சாவூர் வடக்கு வாசல் எனும்  இடத்தில்  தமிழீழ விடுதலை புலிகளின் மாவீரர் லெப்டினன்ட் போசனின்   நினைவு கல்வெட்டு உள்ளதாக  தெரியவந்துள்ளது.

அங்குள்ள நாத்திகர் இடுகாட்டிலேயே  மாவீரர் போசன் கல்லறையும் உள்ளதாக கூறப்படுகின்றது.

தமிழீழத் தேசியத்தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களின்  வழிநடத்தலில் ,  இந்திய அமைதிப்படையின் அட்டூழியங்கள் அரங்கேறும்  காலகட்டத்தில் காயமடைந்த போசன்   , தொடர்  மருத்துவச் சிகிச்சைக்காக தஞ்சாவூரில் தங்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில்  இந்திய உளவுத்துறையினர்  போசன்  இருக்குமிடத்தை அறிந்து  தமிழக பொலிஸாரின் உதவியோடு  அவரை கைது செய்ய முனைந்துள்ளனர்.

இதை அறிந்த லெப்டினன்ட் போசன் எதிரிகளின் கையில் சிக்காது   தன் கழுத்தில்  அணிந்திருந்த  சயனைட் குப்பியை  கடித்து  வீரசாவைத்தழுவியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...