தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருகோணமலை மாவட்டத்தில் வெள்ளப்பெருக்கு – மூவாயிரத்திற்கு மேற்பட்டோர் இடம்பெயர்வு..

திருகோணமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பெய்து வரும் மழையினால் பெரும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

திருகோணமலை மாவட்டத்தில் மழை காரணமாக பல்வேறு இடங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கிண்ணியா, மூதூர், சேரவில , கந்தளாய் உட்பட்ட  பிரதேசங்கள் வெள்ள அனர்த்தங்களை எதிர் நோக்கியும் உள்ளது.

சேரவிலை, கிண்ணியா, மூதூர்,வெருகல் பிரதேச செயலகப் பிரிவுகளை உள்ளடக்கிய 1022 குடும்பங்களை சேர்ந்த 3790 பேர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 108 குடும்பங்கள் உறவினர்களின் வீடுகளுக்கு இடம் பெயர்ந்துள்ளதுடன் 26 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளது.

இதன்காரணமாக   மூவாயிரத்திற்கு மேற்பட்ட தமது வீடுகளைவிட்டு  மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

Comments
Loading...