தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருகோணமலை முதல் யாழ்ப்பாணம்வரை இருள் சூழும் -கொழும்பு பல்கலைக்கழக பேராசிரியர் ..

சூரிய கிரகணம் காரணமாக யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையான பகுதிகள் இருளில் மூழ்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை  கொழும்பு பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தன ஜெயரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இந்த வருட இறுதியில் தென்படும்    சூரிய கிரகணம்  எதிர்வரும், டிசம்பர் 26ஆம் திகதியன்று முழுமையாக   தென்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கிரகணம்  யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலை பகுதிகளில் முழுமையான தென்படவுள்ள நிலையில், அந்த பகுதிகள் இருளில் மூழ்கும் எனவும்  பேராசிரியர் சந்தன ஜெயரத்ன தெரிவித்துள்ளார்.

இதேவேளை, எதிர்வரும் டிசம்பர் 26ஆம் திகதியுடன் சுனாமி அனர்த்தம் ஏற்பட்டு 15 ஆண்டுகள் ஆகின்ற நிலையில், இந்த சூரிய கிரகணம் தென்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...