தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருக்குறள் பற்றி நாம் அறியாத விடயங்கள்..

திருக்குறள்

உலகப்பொதுமறையாக தமிழர்கள் மட்டுமின்றி உலகம் முழுவதும் உள்ள பல நாடுகளாலும் கொண்டாடப்படும் நூலாக திருக்குறள் உள்ளது.

ஏனெனில் இதில் கூறப்பட்டுள்ள கருத்துக்களும், வாழ்வியல் தத்துவங்களும் எந்தவொரு மதத்திற்கோ, நாட்டு மக்களுக்கோ மட்டும் கூறப்பட்டது அல்ல.

இப்பூமியில் மனிதராய் பிறந்த அனைவருக்கும் திருக்குறள் பொதுவானது. இதற்கு குறள் என பெயர் வந்தது என்பதற்கும் ஒரு தனிக்கதை உள்ளது.

தற்போது இருக்கும் சான்றுகளின் படி திருக்குறள் மொத்தம் 1330 உள்ளது. அறத்துப்பால், பொருட்பால் மற்றும் காமத்துப்பால் என மூன்று பிரிவுகளாக பிரிக்கப்பட்ட திருக்குறளில் மொத்தம் 133 அதிகாரங்கள் உள்ளது.

அதிகாரத்திற்கு பத்து குரலாக மொத்தம் 1330 குறள்கள் உள்ளது. ஆனால் உண்மையில் திருக்குறளின் மொத்த எண்ணிக்கை இதைவிட அதிகம்,

கடைச்சங்க காலத்தில் புலவர்களுக்குள் ஏற்பட்ட மோதலால் பல சுவடிகள் எரிக்கப்பட்டுவிட அவற்றில் இருந்து மிஞ்சியவையே தற்போது இருக்கும் திருக்குறளாக தொகுக்கப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

திருக்குறள் பெயர்க்காரணம்

திருவள்ளுவர் குறளிகள் இனத்தை சார்ந்தவர் என்றும் அதனால் அவர் இயற்றிய நூல் குறளி என அழைக்கப்பட்டதாகவும், பின்னாளில் அதுவே மருவி திருக்குறள் என்று மாறியதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் கூறுகிறார்கள்.

அதில் கூறப்பட்ட கருத்துக்கள் மாண்பை குறிப்பதால் மரியாதையின் அடைமொழியான ‘ திரு ‘ சேர்க்கப்பட்டு பின்னாளில் திருக்குறளாக மாறியது.

திருக்குறள் என்பது திருவள்ளுவர் தனக்கு நேர்ந்த அனுபவங்களையும், வாழ்க்கை குறித்த எண்ணங்களையும் சேகரித்து வைத்த குறிப்புகள்தான் திருக்குறளாக அவரால் தொகுக்கப்பட்டது.

திருவள்ளுவர் காலம்

தொடர்புடைய பதிவு

திருவள்ளுவர் கடைச்சங்க காலமான கிமு 300 க்கும், கிபி 250 க்கும் இடைப்பட்ட காலத்தில் வாழ்ந்ததாக நம்பப்படுகிறது.

அக்காலத்தில் மதுரையை ஆரியப்படை கடந்த நெடுஞ்செழியன் என்னும் பாண்டிய மன்னன் ஆண்டுவந்தார். அப்பொழுதுதான் திருவள்ளுவர் கடைச்சங்கத்தில் திருக்குறளை அரங்கேற்றம் செய்ததாக கூறப்படுகிறது.

இப்பொழுது இருப்பது போலவே அக்காலத்திலும் திறமையாளர்களை கவிழ்க்க பல சூழ்ச்சிகள் இருந்தது. பலகட்ட முயற்சிகளுக்கு பின் ஒளவையார் தான் திருக்குறள் அரங்கேற்றத்திற்கு உதவியதாக கூறுகிறார்கள்.

திருவள்ளுவர் எந்த சமயத்தையும், மதத்தையும் சார்நதவரல்ல. அதனால்தான் அவரின் திருக்குறளில் குறிப்பிட்ட கடவுளை பற்றி எந்த குறிப்புகளும் இல்லை.

மேலும் தன் திருக்குறளில் சாதி, மத எதிர்ப்பு பற்றிய பல கருத்துக்களை கூறியுள்ளார். இதுவே அவரை பல புலவர்கள் வெறுக்க காரணமாயிற்று.

இதனால்தான் அவரை பற்றிய அனைத்து தகவல்களும் திட்டமிட்டு இருட்டடிப்பு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

திருவள்ளுவருக்கும் மற்ற புலவர்களுக்கும் இடையே சில மோதல்கள் இருந்தததை உறுதிப்படுத்தும் வகையில் திருவள்ளுவ மாலையில் ஒரு பாடல் உள்ளது.

அதாவது ” ஆற்றல் அழியுமென்று அந்தணர்கள் நான்மறையப் போற்றி உரைத்து ஏட்டின் புறத்தில் எழுதார் – ஏட்டை எழுதி வல்லுநரும் அல்லாரும் வள்ளுவனார் முப்பாலைச் சொல்லிடினும் ஆற்றல் சோர்வன்று ” என்பது அது.

இதன் பொருளானது யாதெனில் சாதி, மத சூழ்ச்சிகளை மக்கள் அறிந்து கொள்ளாமல் இருக்க வேண்டுமென நான்கு வேதங்களும் கூற வள்ளுவரோ அனைவரும் சமமென முப்பாலுடைய திருக்குறளை எழுதினார் என்பதாகும்.

அய்யன் வள்ளுவன் 2000 ஆண்டுகளுக்கு முன்னர் சாதி, மதத்திற்கு எதிராக பற்றி பேசியுள்ளார் என்பது வரலாறுகள் கூறுகின்ற உண்மை.

திருவள்ளுவர் திருக்குறள் மூலம் அழியாபுகழ் அடைந்த போதிலும் அவரை கௌரவிக்கும் விதமாக தமிழகத்தின் கன்னியாகுமரியில் முக்கடல் கலக்கும் இடத்தில் முப்பால் தந்த வள்ளுவனுக்கு 133 அடி உயர சிலை வைக்கப்பட்டுள்ளது.

அதுமட்டுமின்றி உலகின் பல நாடுகளும் திருக்குறளையும், திருவள்ளுவரையும் போற்றி கொண்டிருக்கின்றன.

உலகின் பல மொழிகளில் திருக்குறள் மொழிபெயர்க்கப்பட்டு கொண்டிருக்கிறது. தமிழ் இருக்கும் வரையிலும் வள்ளுவரின் புகழும், திருக்குறளின் புகழும் அழியாது.

Comments
Loading...