தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

திருச்சி சிறப்பு முகாமில் ஈழ அகதி தற்கொலை முயற்சி

இலங்கையின் 71 வது சுதந்திரம் நேற்று முந்தினம் இலங்கையில் கோலாகமாக கொண்டாடப்பட்டது. ஆனால் அதேவேளை திருச்சி சிறப்புமுகாமில் அடைத்து வைக்கப்பட்டிருந்த ஈழ அகதிகள் தமது விடுதலை கோரி போராடியுள்னர். அப்போது ஒரு அகதி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதில் கொடுமை என்னவென்றால் முகாமிற்கு பொறுப்பான அதிகாரி இவர்களை வந்து பார்க்கவுமில்லை. இவர்களின் கோரிக்கையை கேட்கவும்கூட இல்லை.

இலங்கையில் காணாமல் போனவர்களின் உறவுகள் 700 நாட்களாக போராடுகின்றனர். இலங்கையில் சிறையில் உள்ளவர்களின் விடுதலைக்காகவும்கூட குரல் எழுப்பப்படுகிறது. ஆனால் இந்தியாவில் சிறப்புமுகாமில் அடைத்து வைத்திருப்பவர்களின் விடுதலைக்கு இலங்கையிலும் யாரும் குரல் கொடுப்பதில்லை. இந்தியாவிலும் குரல் எழுப்புவதில்லை.

தமிழ்தேசிய ஊடகம் என்று பீற்றித்திரியும் ஐபிசி கூட இவர்கள் பற்றிய செய்திகளை பிரசுரிப்பதில்லை. இவர்கள் செய்த தவறு ஈழத் தமிழராக பிறந்தது மட்டுமல்ல அகதியாக தமிழ்நாட்டை நம்பி சென்றதே. இவர்கள் தமிழ்நாட்டை தவிர வேறு எந்த நாட்டிற்கு சென்றிருந்தாலும் நிச்சயம் சட்டரீதியாக நடத்தப்பட்டிருப்பார்கள். இப்படி சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டிருக்க மாட்டார்கள்.

“யாரும் ஏன் என்று கேட்க நாதியற்ற அகதி நாய்கள்” என்று தமிழக காவல்துறை அதிகாரிகள் இவர்களை பாhத்து ஏசுவார்கள். அது உண்மைதான். யாராவது ஒருவர் இருந்திருந்தால்கூட இவர்களுக்கு இந்த நிலை இருக்காதே!

Comments
Loading...