தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தீர்மானங்கள் எதுவும் எட்டப்படாது ஒத்திவைகப்பட்ட கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு..

கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் தீர்மானங்கள் எதுவும் எட்டப்படாது கூட்டம் மீண்டும் வெள்ளிக்கிழமைக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின்   அலுவலகத்தில் நேற்று மாலை கூட்டமைப்பு குழு கூட்டம் நடைபெற்றது.

ஐக்கிய தேசிய முன்னணிக்கு ஆதரவு வழங்க வேண்டுமாயின் தழிழர் நலன் பேணும் விடயங்கள் குறித்த உறுதிப்பாட்டை எழுத்து மூலம் பெறவேண்டும் என ரெலோ அமைப்பினர் கூட்டத்தில் வலியுறுத்தியுள்ளனர்,

அதற்கு எழுத்து மூலமான உறதி மொழியை வலியுறுத்துவது பாதகமான அரசியல் விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் அதனை தவிர்ப்பது நன்று எனவும்  இரா. சம்பந்தன் கூறியுள்ளார்.

இந்நிலையில் மாகாண சபைகளுக்கான அதிகாரங்களை நடைமுறைப்படுத்தல் தொடர்பான விடயங்கள் எதிர்வரும் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ள  கூட்டமைப்பு குழு கூட்டத்தில் பேசி தீர்மானம் எட்டப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் குறித்த கூட்டத்தில் இரா. சம்பந்தன், மாவை சோ.சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், புளொட் கட்சி சார்பில் த.சித்தார்த்தன், ஆர்.ராகவன், ரெலோ அமைப்பு சார்பில் செல்வம் அடைக்கலநாதன், என். ஸ்ரீகாந்தா, எம்.கே.சிவாஜிலிங்கம், கோவிந்தன் கருணாகரம், மற்றும் எஸ். வினோநோகராதலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

 

Comments
Loading...