தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

துணுக்காய் வலய மட்ட விளையாட்டுப்போட்டி ஒட்டுசுட்டான் மகாவித்தியால விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

துணுக்காய் வலய மட்ட விளையாட்டுப்போட்டி ஒட்டுசுட்டான் மகாவித்தியால விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றுள்ளது.

சிறப்பு விருந்தினர்

இன்று ( 03.05.18)  மாலை 1.30 மணியளவில் முல்லைத்தீவு மாவட்டம் துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலைகளுக்கிடையிலான வலய மட்ட தடகள விளையாட்டுப்போட்டி நிகழ்வுகள் துணுக்காய் வலய கல்விப்பணிப்பாளர் பி.ரவிச்சந்திரன் தலைமையில்  நடைபெற்றது.

இந் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக வடமாகாண விவசாய அமைச்சர் க.சிவனேசன் அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார்.

தடகள விளையாட்டு

துணுக்காய் கல்வி வலயத்திற்கு உட்பட்ட பாடசாலை மாணவர்களின் தடகள விளையாட்டு போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை சிறப்பு விருந்தினர் க.சிவனேசன் அவர்கள் வழங்கி கௌரவித்துள்ளதுடன் தொடர்ந்து மாணவர்களுக்கு சான்றிதழ்களை விருந்தினர்கள் வழங்கி கௌரவித்துள்ளார்கள்

துணுக்காய் வலய விளையாட்டு போட்டி நிகழ்வுகளில் கோட்ட நிலையில் ஒட்டுசுட்டான் கோட்டம் 690 புள்ளிகளை பெற்று முதலாம் இடத்தினை பெற்றது,

மாந்தை கிழக்கு கோட்டம் 648.5 புள்ளிகளை பெற்று இரண்டாம் இடத்தினையும், துணுக்காய் கோட்டம் 628.5 புள்ளிகளை பெற்று மூன்றாம் இடத்தினையும் பெற்றுள்ளன.

பழுதூக்கும் போட்டி

இந்த விளையாட்டு நிகழ்வில் ஆசிய மட்டத்தில் பழுதூக்கும் போட்டியில் கலந்து கொண்டு வெற்றிபெற்ற துணுக்காய் வலயத்தினை சேர்ந்த மாணவியினையும் அவரின் பயிற்சியாளரும் கௌரவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது

 

Comments
Loading...