தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

துருக்கியில் முஸ்லீம் மத குருவுடன் தொடர்பில் இருந்ததாக கூறி 1,112 பேரை கைது செய்ய உத்தரவு…

துருக்கியில் ஆட்சிக் கவிழ்ப்புக்கு முயற்சித்த முஸ்லீம் மத குரு பெதுல்லா குலெனுடன் தொடர்பில் இருந்ததாக கூறி ஆயிரத்து 112 பேரைக் கைது செய்ய அந்நாட்டு   அரசு உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016ஆம் ஆண்டு துருக்கி அதிபர் டயிப் எர்டோகனின் ஆட்சியைக் கவிழ்க்க நடந்த வன்முறையின்போது  250 பேர் வரை உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில் துருக்கியில் பிறந்தவரும் தற்போது அமெரிக்காவில் வசிப்பவருமான முஸ்லீம் மத குரு பெதுல்லா குலென் தான் ஆட்சியைக் கவிழ்க்க முயற்சித்ததாக குற்றம்சாட்டப்பட்டது.

இதனைஅடுத்துஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபட்டதாக தற்போது வரை 77 ஆயிரம் பேரை அரசு கைது செய்துள்ளது.

அந்தவகையில் , தற்போது பெதுல்லா குலென் தொடர்பில் உள்ளவர்கள் எனக் கூறி மேலும் ஆயிரத்து 112 பேரைக் கைது செய்ய துருக்கி அரசு உத்தரவிட்டுள்ளதாக தெரிவிக்கபப்ட்டுள்ளது.

Comments
Loading...