தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தூக்குத் தண்ட னையை நடைமுறைப்படுத்தினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நீக்கப்படும் அபாயம் -சுமந்திரன் எச்சரிக்கை…

ஜனாதிபதி,  மீண்டும் தூக்குத் தண்ட னையை நடைமுறைப்படுத்தினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நீக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருப்பதாக  எச்சரிக்கப்பட்டுள்ளது

இந்த எஆசிக்கையினை  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன்  விடுத்துள்ளார்.

மேலும்  இன்னும் இரண்டு மாதங்களில் தூக்குத் தண்டனையை நிறைவேற்று வதற்கான நடவடிக்கைகளை முன் னெடுக்கப் போவதாக ஜனாதிபதி நாடாளுமன்றத்தில் அறிவித்திருந் தார்.

இதனால் நாட்டுக்குக் கிடைத்து வரும் ஐரோப்பிய ஒன் றியத்தின் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை நீக்கப்படுவதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.சிறிது காலம் நீக்கப்பட்டு மீண் டும் இலங்கையின் பொருளாதாரத் துக்கு உறுதுணையாகப் பல்வேறு பிரயத்தனங்களின் பின்னர் ஜி.எஸ்.பி. பிளஸ் வரிச் சலுகை கிடைக் கப் பெற்றுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், இந்த விசேட சலுகை ஜனாதிபதியின் தூக்குத் தண்டனை நிறைவேற்றும் தீர் மானத்தினால் இழக்கும் நிலை ஏற்படலாம் என எம்.ஏ. சுமந்திரன்   எச்சரித்துள்ளார்.

Comments
Loading...