தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தேசிய அரசைக் கொள்கையளவில் எப்போதுமே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை-அமைச்சர் மனோ கணேசன் தெரிவிப்பு..

தேசிய அரசைக் கொள்கையளவில் தான் எப்போதுமே ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

மாத்தளையில் நேற்று முன் தினம் இடம்பெற்ற நடமாடும் சேவை நிகழ்வில் கலந்து கொண்டுபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

தேசிய அரசென்பது உண்மையில் நல்ல விடயம்தான். ஆனால் இலங்கை போன்றதொரு நாட்டுக்கு இந்த தேசிய அரசு முறைமை பொருத்தமானதா எனவும் அவர் கேள்வியெழுப்பியுள்ளார்.

கடந்த  2015 ஆம் ஆண்டில் ஜனாதிபதி சிறிசேன மற்றும் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரை இணைத்து நல்லாட்சிக்கான தேசிய அரசு ஒன் றினை உருவாக்கியதாகவும்,

ஆனால் இன்று அந்த அரசின் நிலைமை தலைகீழாக மாறியிருக்கின்றதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாங்கள் பொறுப்புடன் உருவாக்கிய அந்த தேசிய அரசாங்கம் இன்று அகல பாதாளத்தில் விழுந்து இருக்கின்றதாகவும்,

முன்னேற்றமடைந்த நாடுகளில் அதாவது அறிவும் இதயமும் வளர்ச்சியடைந்த நாடுகளில் இந்த தேசிய அரசென்பது சாத்தியப்ப டான தொரு விடயம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும்  நாட்டை நேசிக்காமல் தனது பதவியையும் தனது குடும்பத்தையும் மட்டுமே எண்ணிச் செயற்படும் அரசியல் வாதிகளே எமது நாட்டில் இருக்கின்றார்கள் என்றும், எனவேதான்  எமது நாட்டுக்கு தேசிய அரசு என்பது பொருத்தமற்றது  எனவும் அமைச்சர் மனோகணேசன் இதன்போது மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...