தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

தொடரும் மன்னார் புதைகுழி அகழ்வு…

மன்னார் மாவட்டத்தில் உள்ள சதொச கட்டட வளாகத்தில் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைக்குழியின் அகழ்வுப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில் தொடர்சியாக சந்தேகத்துக்குரிய மனித எச்சங்கள் புதிதாக மீட்கப்பட்டும் அடையாளப்படுத்தப்பட்டும் வருகின்றன.

அந்த வகையில்  ​நேற்றும்  70வது தடவையாக அங்கு  அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுடிருந்தன.

தற்போதைய நிலையில் அங்கு  நூற்றுக்கும் அதிகமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டு பொதி செய்யப்பட்டு மன்னார் நீதிமன்ற பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளது.

இதேவேளை  மீட்கப்படாமல் அடையாளப்படுத்தப்பட்டுள்ள மனித எச்சங்களை அகழ்வு செய்யும் பணிகள் தொடர்ந்து நடைபெற்றுவருகின்றது.

இதுவரையில் மேற்கொள்ளப்பட்ட அகழ்வுகளில் பெரியவர்கள் மற்றும் சிறுவர்களின் மனித உடல் எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளன.

மன்னார் வைத்தியசாலையின் சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஸ தலைமையில் அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து இந்த அகழ்வு பணியை தொடர்சியாக மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...