தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நடிகர் விஜய் திடீரென்று ரசிகர்களை சந்தித்தார்.

 அரசியலுக்கு வரப்போவதாக நடிகர் விஜய் பற்றி ஏற்கனவே பரபரப்பு தகவல்கள் வந்தன. சில மாவட்டங்களில் ரசிகர்களின் மாநாடுகளையும் அவர் நடத்தினார்.
மேலும், ரசிகர் மன்றத்தை ”விஜய் மக்கள் இயக்கமாக” மாற்றி தமிழகம் முழுவதும் அதற்கு நிர்வாகிகளையும் நியமித்து உள்ளார்.
இதையடுத்து, ரசிகர்கள் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் ஏழைகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கி வருகிறார்கள்.
வழக்கமான சந்திப்பு
இந்த நிலையில் விஜய் திடீரென்று ,சென்னை அருகே உள்ள பனையூரில், கடந்த 2 நாட்களாக ரசிகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார். அவர்களுடன் புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.
ரசிகர்கள் அனைவருக்கும் உணவும் பரிமாறப்பட்டது. இது வழக்கமான சந்திப்புதான் என்றும் வேறு திட்டம் எதுவும் இல்லை என்றும் ரசிகர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
விஜய் தற்போது ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் படத்தில் நடித்து வருகிறார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
இவர்கள் கூட்டணியில் ஏற்கனவே துப்பாக்கி, கத்தி படங்கள் வெளியாகி வரவேற்பை பெற்றன. மூன்றாவது தடவையும் இணைந்துள்ளனர். இந்த படம் தீபாவளிக்கு திரைக்கு வருகிறது என்பது
Comments
Loading...