தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நல்லிணக்க அடிப்படையில் விடுவிக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்கள்….

நல்லிணக்க அடிப்படையில்  நேற்றையதினம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஆறு தமிழக மீனவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

யாழ் மல்லாகம் நீதிமன்றம் அவர்களை  விடுதலை செய்துள்ளது.

கடந்த வருடம் ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து படகில்  மீன் பிடிக்க வந்திருந்த நிலையில் கடல் சீரின்மை காரணமாக படகு நடுக்கடலில் சேதமடைந்தது.

இதில்  கடலில் முழ்கிய ஆறு தமிழக  மீனவர்களை மீட்ட  இலங்கை கடற்படை மீனவர்களை வழக்கு பதிவு செய்து மல்லாக்கம் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.

அதனை தொடர்ந்து குறித்த  மீனவர்கள் தொடர்ந்து விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில்  நல்லிணக்க அடிப்படையில்  நேற்றையதினம் (23.01.19 ) குறித்த மீவர்கள்  மல்லாகம் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டு  விடுவிக்கப்பட்டுள்ளதாக   தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments
Loading...