தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு உள்ளது – முன்னாள் பிரதம நீதியரசர்…

19ஆவது அரசியலமைப்பின் படி ஜனாதிபதிக்கு நாடாளுமன்றத்தை கலைக்கும் அதிகாரம் உள்ளதாக முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஒருவருக்கு நாடாளுமன்றதை ஒத்திவைக்கவும் கலைக்கவும் அதிகாரம் இருப்பதாகவும்  அவர் குறிப்பிட்டுள்ளார்.

குறித்த அரசியலமைப்பை 2002ஆம் ஆண்டு பதவி நீக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்கவின் அரசாங்கமே  கொண்டு வந்ததாகவும் நீதியரசர் கூறியுள்ளார்.

இந்த நிலையில்  நிலைமைகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி ஒருவர் நாடாளுமன்றத்தை கலைக்கலாம் என அந்த 19ஆவது திருத்தத்தில்  உள்ளதாக சரத் என் சில்வா தெரிவித்துள்ளார்.

மேலும்  ஜனாதிபதியின்  தனிப்பட்ட தீர்மானப்படியோ அல்லது நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்தின் படியோ நாடாளுமன்றத்தை கலைக்கமுடியும் என்றும் சரத் என் சில்வா கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments
Loading...