தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

மகிந்தானந்த அளுத்கமகே கைது செய்யப்பட்டுள்ளார்

ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்ப்ட்டுள்ளது.

வாக்குமூலம் வழங்குவற்காக இன்று காலை காவல்துறை நிதிமோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியிருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

2014 ஆம் ஆண்டு 39 மில்லியன் ரூபாய் அரசாங்க நிதியை முறைக்கேடாக பயன்படுத்தி கெரம் மற்றும்  சதுரங்க விளையாட்டு பலகைகளை கொள்வனவு செய்தமை தொடர்பில்  வாக்குமூலம் வழங்கவே, அவர் நிதி மோசடி விசாரணை பிரிவில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...