தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாடுகளின் அரசினையே பிரிதானியா  அங்கீகரிகின்றது – பிரித்தானியா இராஜாங்க அமைச்சர்

நாடுகளின் அரசினையே பிரிதானியா  அங்கீகரிப்பதாகவும் அரசாங்கங்களை அங்கீகரிப்பதில்லை எனவும்  ஆசிய பசுபிக் பிராந்தியங்கள் தொடர்பான பிரித்தானியா  இராஜாங்க அமைச்சர் மார்க் பீல்ட் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கையின் பிரதமராக ரணிலையா  அல்லது மஹிந்தவையா பிரித்தானிய அரசாங்கம் அங்கீகரிக்கின்றது என அந்த நாட்டின் நிழல் வௌியுறவுத்துறை செயலாளர் எமிலி தொன்பெர்ரி கேள்வியெழுப்பினார்.

அதற்கு பதிலளித்த  இலங்கையின் அரசியல் நிலைமைகள் குறித்து பிரித்தானியா உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும்  இராஜாங்க அமைச்சர்  குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டின் அரசியலமைப்பு ரீதியில் சட்டம் மற்றும் அரசியல் நடவடிக்கைகளை உறுதிப்படுத்துமாறு அனைத்துக் கட்சிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் .

நாடாளுமன்றத்தை விரைவில் கூட்டி மக்கள் பிரதிநிதிகளுக்கு தமது கருத்துக்களை முன்வைப்பதற்கான சந்தரப்பத்தை அளிக்க வேண்டும் எனவும் தாம் கேட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுதொடர்பில் இலங்கையின் ஜனாதிபதி மற்றும் சபாநாயகரிடம் பகிரங்க வேண்டுகோள் தாம் விடுத்துள்ளதாக ஆசிய பசுபிக் பிராந்தியங்கள் தொடர்பான பிரித்தானியாவின் இராஜாங்க அமைச்சர் கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...