தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாட்டில் அதிகரித்துவரும் படைப்புழுவின் பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது – வடபிராந்திய விவசாய மேலதிக பணிப்பாளர்…

தற்போது நாடு  முழுவதும் பயிர்களுக்கு சேதம் ஏற்படுத்தக்கூடியவகையில் அதிகரித்துவரும் படைப்புழுவின் பரவலை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமானது என தெரிவிக்கபப்ட்டுள்ளது.

இதனை வடபிராந்திய விவசாய மேலதிக பணிப்பாளர் கலாநிதி ஜேம்சன் அரசகேசரி தெரிவித்துள்ளார்.

நட்டில்  பெரும் தாக்கத்தை ஏற்படுத்திவரும் சேன படைப்புழு இந்தியாவின் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களிலிருந்து இலங்கையின் அம்பாறை வடமத்திய மாகாணங்களில் காணப்பட்ட நிலையில் தற்போது நாட்டில்  பல்வேறு பகுதியை ஆக்கிரமித்துள்ளது.

அந்த வகையில் முல்லைத்தீவில் வெலிஓயா, குமுழமுனை, கேப்பாப்புலவு பகுதிகளிலும் கிளிநொச்சியில் அள்ளிப்பளை, கனேசபுரம், வட்டக்கட்சி, ஜெயப்புரம் ஆகிய பகுதிகளிலும் சோளத்தில் இந்த புழுக்கள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக கமநல சேவைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அத்துடன் மன்னாரில் பருப்புகடந்தான், உயிலங்குளம், மடுக்கரை போன்ற பகுதிகளில் சோளம், பயறு, கௌப்பி பயறு போன்ற தானியங்களிலும் இந்த படைப்புழு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

வவுனியாவில் உலுக்குளம், ஈரப்பெரியகுளம், பம்பைமடு பகுதிகளில் சோளம் மற்றும் உலுந்து பயிர்களிலும் யாழ்ப்பாணத்தில் சாவகச்சேரி, எழுதுமட்டுவான், புத்தூர், ஈவினை பகுதிகளிலும் பாதிப்பை  ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக ஈவினை பகுதியில் கோவாவிலும் இந்த புழுக்களின் தாக்கம் காணப்படுவதாக கமநல சேவைகள் திணைக்கம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை படைபுழு தாக்கத்திற்குள்ளான விவசாயிகளுக்கு 250 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீடு நட்டஈடாக வழங்க அமைச்சரவையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அதோடு  கமத்தொழில் அமைச்சுக்கு கீழ்வரும் சகல திணைக்களங்களையும் ஒன்றிணைத்து அவ்வப்பிரதேசங்களில் கட்டுப்பாட்டு பொறிமுறைகள் மேற்கொள்வதற்கு ஒவ்வொரு மாகாணத்திற்கும் ஒவ்வொரு இணைப்பாளர்களை  அரசாங்கம் நியமித்துள்ளது.

இந்த நிலையில் இலங்கையில் விவசாயத்தில் தற்போது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள சேன படைப்புழுவின் தாக்கம் தொடர்பில் விழிப்புனர்வூட்டும் வகையில் கிளிநொச்சியிலுள்ள வடபிராந்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தில் ஊடகசந்திப்பு நேற்று இடம்பெற்றது.

இதன்போது கருத்து தெரவித்த கலாநிதி ஜேம்சன் அரசகேசரி அரசாங்கத்தின் திட்டத்தின்படி நியமிக்கப்பட்ட அதிகாரிகள் மற்றும் குழுக்களுடன் இணைந்து இந்த புழுவைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

மேலும்  வடமாகாணத்திலுள்ள அனைவரும் இதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் எனவும் அவர்  கோரிக்கை விடுத்துள்ளார்.

இந்த புழுவின் தாக்கமும் பரவலும் மிகக்குறுகிய காலத்தில் அதிகரிக்கும் நிலை காணப்படுவதால் இந்த தாக்கத்தை கட்டுப்படுத்துவது மிகவும் கடினமான விடயம் எனவும் ,

முறையான  நடவடிக்கை மற்றும் அனைவரும் சுயமாக செயற்படும் பட்சத்தில் இந்த படைப்புழுவின் தாக்கத்தை கட்டுப்படுத்த முடியும் என்றும் அவர் நம்ப்பிக்கை வெளியிட்டுள்ளமை  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...