தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாட்டில் பொதுத் தேர்தலுக்கு அவசியமில்லை – இரா.சம்பந்தன்

அரசியலமைப்பை ஏற்க முடியுமா என்பதை மூவின மக்களே தீர்மானிக்க வேண்டிய நிலையில், பொதுத் தேர்தலொன்றை நடத்துவதற்கான அவசியம் இல்லை  என இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

பிரதி சபாநாயகர் ஆனந்த குமாரசிறி தலைமையில் இன்று  கூடிய நாடாளுமன்ற அமர்வில் புதிய அரசியலமைப்பு சம்பந்தமான யோசனையை முன்வைத்து உரையாற்றுகையிலேயே இதனை வெளிப்படுத்தியுள்ளார்.

மக்களை ஒன்றிணைத்தல், அதிகார பரவலாக்கல் போன்ற பல நன்மைகள் புதிய அரசியலமைப்பில் உண்டு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தலைநகரில் அதிகாரம் குவிந்துள்ளதால் அதிகாரம் துஸ்பிரயோகம் செய்யப்படுகின்றதாகவும்,  எனவே, மாகாண மற்றும் பிரதேச ரீதியில் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

அதோடு  நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அரசியலமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும் என்றும், அதன் பின்னர் மக்கள் கருத்துக்கணிப்புக்கு செல்ல வேண்டும் எனவும் இரா சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

மேலும்  அரசியலமைப்பை ஏற்க முடியுமா என்பதை மூவின மக்களும் தீர்மானிக்கட்டும் என்றும்  அவர் இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...