தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாட்டைத் துண்டு துண்டாக்க புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் முயற்சி என்கிறார் தேசிய பிக்கு சம்மேளனத்தின் தலைவர்..

போர் முடிந்த பின்னர் நாட்டைத் துண்டு துண் டாக்க புலம்பெயர்ந்து வாழும், தமிழர்கள் முயற்சிப்பதாக  தேசிய பிக்கு சம்மேளனத்தின் தலைவர் லியன்வல சாசரதன தேரர் தெரிவித்துள்ளார்.

ஞானசார தேரரை விடுதலை செய்யக் கோரி, பொதுமக்களிடம் கையெழுத்துப் பெறும் நடவடிக்கை கண்டியில் நேற்று முன் தினம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டபோதே தேரர் இதனை கூறியுள்ளார்.

புலம் பெயர்ந்து வாழும், தமிழர்ளின் விருப்பத்தை நிறைவேற்றும் வகையில், சில அரசியல் தலைவர்கள் செயற்படுவதாகவும், அதற்கு நாம் ஒருபோதும் இடம் கொடுக்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் யுத்தம் நிறைவடைந்தாலும் நாட்டை விழுங்குவதற்கு தமிழ் டயஸ்போரா காத்திருக்கிறதாகவும்,  தாங்கள் புத்த பிக்குகள் என்ற வகையில்,

சகல சவால்களையும் எதிர்கொள்ளத் தயாராகவே வீதியில் இறங்கியுள்ளதை தமிழ் மற்றும் புலம்பெயர் தேசங்களிலுள்ள ஏனையவர்களும் புரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் நாட்டைச் சமஷ்டி முறையாக மாற்றி ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் துண்டு துண்டாக்க விடமாட்டோம் என்றும்,

இதற்கு எதிராக குரல் கொடுத்துச் சிறையில் இருக்கும்  ஞானசார தேரரைச் சிறையிலிருந்து மீட்க தாம்  போராடுவதாகவும் அதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறும்  தேசிய பிக்கு சம்மேளனத்தின் தலைவர் லியன்வல சாசரதன தேரர்  இதன்போது தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...