தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாட்டைப் பிளவுபடுத்த அரசாங்கமே தம்மைத் தூண்டுகின்றது – எம்.கே. சிவாஜிலிங்கம்..

நாட்டைப் பிளவுபடுத்த இலங்கை அரசாங்கமே தம்மைத் தூண்டுகின்றதாக  வடக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

அதுமட்டும்ல்லாமல் , தமிழர்களின் விடயத்தில் அரசாங்த்திற்கு  இதற்கு மேலும் கால நீடிப்பு வழங்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

அதோடு அரசியல் கைதிகளுக்கு இன்னும் விடுதலை கிடைக்கவில்லை என்றும் , காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பாக எந்தவித தீர்வும் எட்டப்படவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும்  இராணுவத்தினரால் அபகரிக்கப்பட்ட மக்களின் நிலங்கள் முழுதாக விடுவிக்கப்படவில்லை என்றும், இதன் காரணமாக சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்தில் இலங்கை அரசாங்கத்தை  நிறுத்த வேண்டும் எனவும்  எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...