தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நான்கு கேமராக்களுடன் அசத்தும் அசுஸ் ஸ்மார்ட்போன்!

சர்வதேச மொபைல் காங்கிரஸ் 2018 விழாவில் சாம்சங், சோனி மற்றும் நோக்கியா போன்ற நிறுவனங்கள் வெளியிட இருக்கும் சாதனங்கள் குறித்த தகவல்கள் இணையத்தில் ஏற்கனவே பலமுறை வெளியாகியுள்ளது. இவ்விழாவில் அசுஸ் திட்டங்கள் குறித்து அந்நிறுவனம் சார்பில் எவ்வித அறிவிப்பும் வெளியாகாமல் இருக்கிறது.

அசுஸ் சத்தமில்லாமல் இருந்தாலும், பிரபல டிப்ஸ்டரான எவான் பிளாஸ் அசுஸ் வெளியிட திட்டமிட்டிருக்கும் ஸ்மார்ட்போன் குறித்த தகவல்களை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். இத்துடன் அசுஸ் வெளியிட இருக்கும் ஸ்மார்ட்போனின் புகைப்படத்தையும் அவர் பதிவிட்டிருக்கிறார்.

எவான் பிளாஸ் வெளியிட்டிருக்கும் அசுஸ் ஸ்மாப்ட்போனில் பின்புறம் மற்றும் முன்பக்கம் டூயல் கேமரா செட்டப் என மொத்தம் நான்கு கேமராக்களை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் அசுஸ் சென்ஃபோன் 5 லைட் என அழைக்கப்படும் என்றும் அவர் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

புதிய ஸ்மார்ட்போனின் தோற்றம் பார்க்க சென்ஃபோன் 4 சீரிஸ் போன்றே காட்சியளிக்கிறது. முன்பக்கம் மற்றும் பின்புறம் டூயல் கேமரா செட்டப், 18:9 ரக டிஸ்ப்ளே, பின்புறம் கைரேகை சென்சார் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. புகைப்படங்களை எடுக்க 20 எம்பி டூயல் செல்ஃபி கேமரா, பின்புறம் 16 எம்பி டூயல் பிரைமரி கேமரா வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அசுஸ் சென்ஃபோன் லைட் 5 ஸ்மார்ட்போனில் ஃபுல் ஹெச்.டி. பிளஸ் 1080×2160 பிக்சல் ரெசல்யூஷன் கொண்ட ஸ்கிரீன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. 2018 சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் சென்ஃபோன் 5 லைட் தவிர புதிய ஸ்மார்ட்போன் மாடல்களை அசுஸ் வெளியிடுமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

எனினும் அசுஸ் நிறுவனத்தின் புதிய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன்ளும் சர்வதேச மொபைல் காங்கிரஸ் விழாவில் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அசுஸ் வெளியிட இருக்கும் நான்கு கேமரா கொண்ட சென்ஃபோன் 5 லைட் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

Comments
Loading...