தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாம் உறங்கும் போது நடக்கும் பயங்கரங்களை நீங்கள் அறிவீர்களா?

அன்றாட வாழ்க்கையில் மனிதர்களாகிய நாம் கடைப்பிடிக்கும் பழக்கவழக்கங்களும் வாழ்நிலைக் கோலங்களும்தான் எம்மை ஆரோக்கியமான வாழ்க்கையில் குடியமர்த்துகிறன.

அந்த வகையில் நாம் உறங்கும் முறை கூட எமது உடல் ஆரோக்கியத்துடன் நெருங்கிய தொடர்பு கொண்டது. எப்படியெல்லாம் படுக்கவேண்டும் எப்படியெல்லாம் படுக்கக்கூடாது என்பதற்கு வரன்முறைகள் உண்டு

ஒருவர் உறங்கப் போகும்போது இடது பக்கம் பக்கவாடாகப் படுத்தே துயில்கொள்ளவேண்டும் என்கிறது உடல்கூற்றியல். வலது பக்கம் திரும்பிப் படுப்பது உடல் உள்ளுறுப்புக்கள் சார்ந்த பிரச்சினைகளைத் தோற்றுவிக்குமாம்.

அதே போல், நாம் எந்தத் திசையில் தலைவைத்துப் படுக்கவேண்டும் என்பதனையும் விஞ்ஞானபூர்வமாக இங்கே விளக்கவேண்டியுள்ளது.

ஒருபோதுமே வடக்குத் திசையில் தலைவைத்துப் படுக்கக்கூடாது. இவ்வாறு படுக்கின்றபோது பல்வேறுபட்ட உபாதைகளை எமது உடல் எம்மை அறியாமலே சம்பாதித்துவிடும்.

இதற்கு வலுவானதொரு விஞ்ஞானக் காரணமும் உள்ளது. அது என்னவென்று பார்ப்போம்…

இந்த உலகின் அனைத்துவகையான செயற்பாடுகளும் காந்த சக்தியின் நேர் மற்றும் மறை மின்னேற்றத்தின் அடிப்படயிலேயே இயங்குகின்றன. காந்த சக்தி என்ற ஒன்று இல்லாமல் போகுமாயின் உலகமே அழிந்துவிடும்.

காந்தத்துக்கு நேர், மறை எனும் இரு திசைகள் உண்டு. அதே திசை மனிதனுக்கும் உண்டு. தலைப்பகுதி நேர் திசையாகவும் காற்பகுதி மறைத்திசையாகவும் விளங்குகின்றன. அதே போல் பூமிக்கும் இந்தக் காந்தத் திசை உண்டு. பூமியின் வட திசை நேர் மின்னோட்டத்தையும் தென்திசை மறை மின்னோட்டத்தையும் கொண்டன.

காந்தத்தின் இரு நேர்த்திசைகள் இணைவதில்லை. அவை ஒன்னறையொன்று தள்ளும் பண்பினைக்கொண்டவை. இந்த விதிக்கேற்ப பூமியின் வட காந்தப்புலமும் மனிதனின் தலையிலுள்ள வட காந்தப்புலமும் நேர் நேர்த் திசைகளாகும். இவ்வாறு நேர் நேர்த்திசைகள் சேர்கின்றபோது உடல் பலவித உபாதைகளைச் சந்திக்கின்றது. ஹோர்மோன்களின் சுரப்புக்களும் நரம்புமண்டலச் செயற்பாடுகளும் பாதிப்படைகின்றன.

ஆனால் தெற்கே தலையும் வடக்கே காலும் வைத்துப் படுக்கின்றபோது உடலின் ஆரோக்கியம் பலமடைகின்றது. எதிர் எதிர்த் திசைகள் சந்திப்பதனால் உடல் சீரான தன்மையினைப் பெறுகிறது.

வடக்கே தலை வைத்துப் படுக்கும் பெரும்பாலானோருக்கு கெட்ட கெட்ட கனவுகளும், சாமத்தில் யாரோ வந்து உடலை அழுத்துவதுபோலவும், தம்மை அறியாமல் தூக்கத்தில் பிதற்றுவதுமென அசாதாரண நிலைமைகள் தோன்றுகின்றன.

எனவே ஆரோக்கியமானதும் நிம்மதியானதுமான உறக்கத்திற்கு நாம் தென்திசை நோக்கித் தலைவைத்துப் படுப்பதே சிறந்ததாகும்.

Comments
Loading...