தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாம் வீசும் காய்கறிகளின் தோல்களில் இவ்வளவு நன்மையா?..

பொதுவாக நாம் சமைக்கும் காய்கறிகளில் உள்ள தோல்களை நீக்கிவிடுவோம். அவ்வாறு நீக்கிய தோல்களை குப்பையில் போட்டுவிடுவோம்.ஆனால் அதனை நாம் பயன்படுத்தி பல நன்மைகளை பெறமுடியும்.

வெள்ளரிக்காய் தோல்

வெள்ளரிக்காயின் தோலை  கரு வளையங்கள், கண் வீக்கம் போன்றவற்றிற்னை போக்குவதற்கு பயன்படுத்தலாம். நஇவற்றில் உள்ள விட்டமின்கள் கண்ணின் அழகு மற்றும் ஆரோக்கியத்தை பாதுகாக்கும்.

எலுமிச்சை தோல்

சரும பிரச்சினைகளை சரி செய்யும் பண்பு எலுமிச்சை தோலிற்கு   உண்டு. வறண்ட அல்லது எண்ணெய் பசை சருமத்தை கொண்டவருக்கு இதன் தோல் நன்கு உதவும். அத்துடன் முகம் பளபளப்பாகவும், கரும்புள்ளிகள் இன்றியும் மாறும்.

உருளை கிழங்கு

பலருக்கு உருளை கிழங்கு சாப்பிடுவது மிகவும் பிடித்தமான ஒன்றாகும்.  இந்த தோலை கொண்டு உங்கள் முக அழகை எளிதாக பெறலாம். உருளை கிழங்கு  தோலில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இதனை முகத்தில் ஒட்டினால் முகம் பொலிவு பெறும்.

பீட்ரூட் தோல்

ரத்தத்திற்கு நல்ல நண்பனாக இருக்க கூடிய இந்த பீட்ரூட் பல பயன்களை நமக்கு தருகின்றது. பீட்ரூட்டின் தோலை சீவிய பிறகு அதனை தாடை மற்றும் உதடுகளில் தடவினால், மிகவும் அழகாக மாறும்.

கேரட் தோல்

கண்ணிற்கு கேரட் எத்தகைய நன்மையை தருகின்றது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒன்றுதான், பொதுவாக இதனை தோல் சீவியே பயன்படுத்துவோம். குப்பையில் போடும் இந்த தோலை எடுத்து அரைத்து முகத்தோலில் பூசினால் முகத்தில் உள்ள சுருக்கங்கள் மறையும். மேலும், முகம் வெண்மையாக தோற்றம் அளிக்கும்.

 

 

Comments
Loading...