தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாளை இடம்பெறவுள்ள 4வது டெஸ்ட் போட்டிக்கு தெரிவான 13 இந்திய வீரர்கள்…

நாளை  ஆஸ்திரேலியா  சிட்னியில்  நடைபெறவுள்ள 4வது கிரிக்கெட் டெஸ்ட் போட்டிக்கான 13 வீரர்களின் பெயர் பட்டியலை, இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில், இதுவரை நடந்த 3 போட்டிகளில் 2க்கு ஒன்று என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.

நாளை சிட்னி மைதானத்தில் 4வது டெஸ்ட் போட்டி  தொடங்கவுள்ள நிலையில், அதில் பங்கேற்கும் 13 இந்திய வீரர்களின் பெயர் பட்டியலை, பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

அதில்  விராட் கோலி தலைமையிலான அணியில் அஜிங்கிய ரஹானே, கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, விஹாரி, ரிஷப் பண்ட், ஜடேஜா, குல்தீப் யாதவ், அஸ்வின், முகமது சமி, பும்ரா, உமேஷ் யாதவ் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இதேவேளை   போட்டி தொடங்கும்போது,  களத்தில் விளையாடும் 11 பேரில் அஸ்வின் இடம்பிடிப்பாரா என்பது தெரியவரும் என்றும் பிசிசிஐ தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...