தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நாளை சூரிய புயல் பூமியை தாக்கும் – விஞ்ஞானிகள் அறிவிப்பு..

நாளை சூரிய புயல்  பூமியை தாக்கும் என  விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சூரிய புயல் சூரியனில் ஏற்பட்டுள்ள சிறிய ஓட்டை காரணமாக உருவாகியுள்ளதாகவும்  அவர்கள் தெரிவித்துள்ளனர்.

சூரிய புயலின் பாதையில் பூமி உள்ளதால்  இந்த புயல் பூமியை நெருங்கும்பொழுது வானத்தில் நீல நிற கதிர்வீச்சுகள் தென்படும் என்றும், இதனால் செயற்கைக்கோள்களுக்கு மிகுந்த பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளதாகவும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

இதனால்  செல்போன்களில் சிக்னல் பிரச்சனை மற்றும் ஜிபிஎஸ்  (GPS) பிரச்சனைகள் ஏற்படும் என்றும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

எப்பொழுதுதும் பூமிக்கு சூரிய புயலின் தாக்குதல்  இருந்துகொண்டிருக்கும். அதனை பூமியின் காந்தப்புலம் கட்டுப்படுத்திவிடும். ஆனால், இந்த புயலின் வேகம் சற்று அதிகமாக இருப்பதாகவும் அவர்கள்  எச்சரித்துள்ளனர்,

சூரிய புயலால் மனிதர்களுக்கு பெரிதளவில் இல்லை  என்றாலும்   புயலில் இருந்து வெளியேறும் கதிர்வீச்சு அதிகமாக இருந்தால் கேன்சர் போன்ற நோய்கள் உண்டாகும் எனவும் விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதேவேளை இதற்கு முன்பாக 1859ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இதேபோன்று சூரிய புயலின் தாக்குதல் ஏற்பட்டது என்பது  குறிப்பிடத்தக்கது.

Comments
Loading...