தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நியூசிலாந்துக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில் , ஆட்டமிழந்த இந்திய அணி…

நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 5 ஒருநாள் போட்டி தொடரில் விளையாடி வருகிறது.

இந்திய அணி 3 போட்டிகளில் வென்று  தொடரை கைப்பற்றிய நிலையில், 4வது போட்டி ஹாமில்டனில் இன்று தொடங்கியது.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் வில்லியம்சன், இந்திய அணியை பேட்டிங் செய்யுமாறு கூறினார்.

இதையடுத்து துவக்க வீரர்களாக களமிறங்கிய ஷிகார் தவான் 13 ரன்களிலும், ரோகித் சர்மா 7 ரன்களிலும் ஆட்டமிழந்துள்ளனர்.

சுப்மான் கில் 9 ரன்களில் அவுட் ஆன நிலையில், அம்பதி ராயுடு, தினேஷ் கார்த்திக் ஆகியோர் ரன் எதுவும் எடுக்காமல் வெளியேறினர்.

அடுத்தடுத்து களமிறங்கிய இந்திய வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

இந்நிலையில் 31வது ஓவரில் இந்திய அணி 92 ரன்னில் ஆட்டம் இழந்தது.

நியூசிலாந்து அணியின் ட்ரெண்ட் போல்ட் 5 விக்கெட்டுகளையும், கொலின் டே 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதனை அடுத்து 93 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.

Comments
Loading...