தமிழினத்திற்கான தனித்துவமான ஊடகம்

நிறம் மாறும் எரிமலை

மெக்ஸிகோவில்  எரிமலை ஒன்று நிறம் மாறுவது  ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

மத்திய மெக்ஸிகோவில் உள்ள மோரோலெஸ் ((Moroles)) மாகாணத்தில் உள்ள போபோகேட்டபட் ((Popocatepetl)) என்று பெயரிடப்பட்டுள்ள அந்த எரிமலை தற்போது புகையை வெளிவிட்டு வருகிறது.

எரிமலையைக் கண்காணித்து வரும் குழுவினர் வீடியோ எடுத்த போது, முதலில் சாம்பல் நிறத்தில் புகையை வெளியேற்றிய எரிமலை, அடுத்த சில நிமிடங்களில் செந்நிறமாக மாறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எரிமலையின் இந்தச் செயல்பாடு ஆராய்ச்சியாளர்களிடையே பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் எரிமலையில் இருந்து வெளியாகும் சில வாயுக்களால் இதுபோன்ற நிறமாற்றம் ஏற்படும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

Comments
Loading...